ரீல்ஸ் மோகம்: மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு விஷம் குடித்த கணவன்! - Seithipunal
Seithipunal


டெல்லி: சமூக ஊடகங்களில் மனைவி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டதை மையமாகக் கொண்ட தகராறு, கொலைவெறியாக மாறிய பரிதாப சம்பவம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

நஜாப்கர் ரோஷன்புராவைச் சேர்ந்த, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான அமன் இ-ரிக்ஷா ஓட்டுநராக வேலை செய்து வந்தார். தனது மனைவி, 6 மற்றும் 9 வயது ஆகிய இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார்.

அமனின் மனைவி சமூக ஊடகங்களில் மிகவும் செயல்படுபவராக இருந்தார். தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்த அவர், சுமார் 6,000 ஃபாலோவர்களை பெற்றிருந்தார். மனைவியின் இந்த நடவடிக்கையை விரும்பாத அமன், அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை, இதே விஷயத்தில் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் உச்சக்கட்டத்திற்கு சென்ற நிலையில், ஆத்திரமடைந்த அமன் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

அதன் பின்னர், தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்த அமன், விஷம் குடித்துவிட்டு, தூக்கில் போக முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அவர் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, அவரது மனைவியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reels Moham Husband strangles wife to death and drinks poison


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->