தெருநாய் தொல்லை அதிகரிப்பு: தெருநாயால் விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாதத்தில், தெருநாய்களுக்கு ஆதரவாக சிலர் வாதாடியிருந்தனர். அந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய் திடீரென சாலையில் குறுக்கே வந்ததால், ஒரு இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்திருந்த அனாமிகா என்ற 4 வயது சிறுமி படுகாயமடைந்தார்.

உடனடியாக அவரை வேலூர் பிளம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தெருநாய் தொல்லை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகத்தில் கோரிக்கை அதிகரித்து வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stray dog ​​trouble on the rise 4 year old girl dies after being hit by a stray dog


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->