பீஹார் தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் பதிவு செய்துள்ள 02-வது மிக மோசமான தோல்வி..! - Seithipunal
Seithipunal


பீஹார் தேர்தல் வரலாற்றில் 2010 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 04 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான தோல்வியை பதிவு செய்திருந்தது. தற்போது (2025) நடந்த தேர்தலில் 06-இல் மட்டுமே வெற்றி பெற்று 02-வது முறையாக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

பீஹார் சட்டசபைதேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. பீஹாரில் ராகுல் நடத்திய பாதயாத்திரையால் வெற்றியால் கட்சி பலம் பெற்றதாக கூறி காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்டது. ஆனால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆர்ஜேடி அதற்கு சம்மதிக்கவில்லை. 

ஏனெனில், கடந்த தேர்தலில் 70 தொகுதிகளை கொடுத்து 19-இல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதனையடுத்து இந்த முறை அப்படி நடக்கக்கூடாது என்பதற்காக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க தேஜஸ்வி மறுத்ததால் இரு கட்சிகள் இடையே உட்கட்சி மோதல் ஏற்பட்டது.

அதன் பின்னர், தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் மறுத்தது. பின்னர், இரு கட்சிகளும் பேசி தேர்தலை சந்தித்தன. காங்கிரசுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நீண்ட இடைவேளைக்கு பிறகு பீஹார் வந்த ராகுல் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரது சகோதரி பிரியங்கா, காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் அக்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. 06-இல் மட்டுமே அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

நாடு விடுதலை பெற்ற பிறகு பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அமோக வெற்றி பெற்று வந்த காங்கிரஸ், பின்னர் நடந்த தேர்தல்களில் பலத்தை இழந்து ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை வென்றுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை:


1952 - 239


1957 -210


1962-185


1967 -128


1972 - 167


1977 -286


1980 - 169


1985 - 196


1990 - 71


1995 -29


2000 - 23


2005 பிப்.,- 10(84-இல் போட்டி)


2005 அக்., - 09 (51-இல் போட்டி)


2010 - 04( 243 இல் போட்டி)


2015- 27( 41ல் போட்டி)


2020 -19( 70-இல் போட்டி)


2025 - 06( 61-இல் போட்டி) தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress 2nd worst defeat in Bihar election history


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->