சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. போலீசார் தீவிர விசாரணை.!
Concrete mixture operator harrasment to girl in odisha
ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் மாவட்டத்திலுள்ள புல்பானி என்ற பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் கட்டிட வேலை நடந்துள்ளது. இங்கு சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் கான்கிரீட் கலவை இயந்திரத்தை இயக்குவதற்காக வந்துள்ளார்.
அப்போது கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்று சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா இருவரும் அந்த நபரை அடித்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Concrete mixture operator harrasment to girl in odisha