தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இனி இது கட்.! வெளியான அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவாகவும், அதிகபட்ச பேருக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகிறது. 

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் அஷீஷ் சிங், தடுப்பூசி போடுவது ஓரடி முன்னே சென்றிருக்கிறார். அதாவது அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளா விட்டால் சம்பளம் இல்லை என தெரிவித்துள்ளார். 

வருகின்ற ஜூலை 31-ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு அதற்கான சான்றிதழை அளித்தால்தான் அடுத்த மாதம் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். ஜூன் மாதத்திற்கான சம்பளம் போடும்போது சான்றிதழையும் கேட்டுப்பெறுங்கள் என்று மாவட்டத்தின் அனைத்து கருவூல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமின்றி அரசின் தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள் என்ற தகவலையும் சமர்ப்பிக்கும்படி பல்வேறு துறை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

collector new order no salary if you are not vaccinated


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->