ஆர்.சி.பிக்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்! - Seithipunal
Seithipunal


 18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு  பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

நேற்று  அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

2009, 2011, 2016, 2025 என நான்கு முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய உள்ளது. இதில் 2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி, 2025ல் முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல் கோப்பையை முதல் முறையாக வென்றுள்ளது. இதற்காக பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், சினிமா பிரபலங்களான ரன்வீர் சிங், அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, பாசில் ஜோசப், அனன்யா பாண்டே, சோனு சூட் மற்றும் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதில், குறிப்பாக அல்லு அர்ஜுன் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cinema celebrities who congratulated R C P


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->