'வழக்கு விசாரணையின் போது வாய்மொழியாக கூறும் கருத்துகள் தவறாக பரப்பப்படுகிறது': தலைமை நீதிபதி கவாய் கவலை..!
Chief Justice Kawai is concerned that comments made verbally during the trial are being misrepresented
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர், தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை தாக்க முயன்றதோடு, தன் காலில் அணிந்து இருந்த காலணியை கழற்றி அவரை நோக்கி வீச முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள ஜாவேரி கோயிலில் எழு அடி உயர சிலையை புனரமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய், 'விஷ்ணு மீது உண்மையிலேயே பக்தி இருந்தால், சிலையை சீர்படுத்தக் கோரி, அவரிடமே பிரார்த்தனை செய்யுங்கள். எதற்காக, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள். 'சிலையை சீர்படுத்தும் அதிகாரம் தொல்லியல் துறையிடம் தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்திடம் இல்லை' என கருத்து தெரிவித்தார்.

இதன் போதே ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர், தலைமை நீதிபதி கவாய், ஹிந்து கடவுளை அவமதித்ததாக அவரை தக்க முயன்றதோடு, அவரை காலனியால் முயன்றுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அனைத்து மதத்தின் மீதும் தனக்கு மரியாதை இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உடனடியாக விளக்கம் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நபர், தலைமை நீதிபதியை தாக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட தலைமை நீதிபதி கவாய்,'வழக்கு விசாரணையின் போது வாய்மொழியாக கூறும் கருத்துகள் தவறாக பரப்பப்படுகிறது' என கவலை தெரிவித்துள்ளார்.
அதாவது, வழக்கு ஒன்றின் விசாரணையின் போது எனது அன்புக்குரிய சகோதர் நீதிபதி வினோத் சந்திரன் சில கருத்துகளை கூற முயன்றார். அதனை கூறுவதற்கு முன்னர் நான் தடுத்து நிறுத்தினேன். இல்லையென்றால், சமூக ஊடகங்களில் என்ன மாதிரியாக அந்த கருத்துகள் பகிரப்படும் என நமக்கு தெரியாது. எண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chief Justice Kawai is concerned that comments made verbally during the trial are being misrepresented