இன்ஸ்டாகிராமில் தற்கொலை வீடியோ: நள்ளிரவில் 3 மணி நேரத்தில் கேரள காவல் அதிகாரியின் மகனைப் பத்திரமாக மீட்ட சென்னை காவல்துறை! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உதவி ஆய்வாளராக (SI) பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர், நேற்று அதிகாலை 1.20 மணியளவில் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை பதற்றத்துடன் தொடர்பு கொண்டார். சென்னையில் தங்கி துரைப்பாக்கம் பகுதியில் தனியார் செயலி மூலம் வாடகை கார் ஓட்டி வரும் தனது 25 வயது மகன் அனந்த கிருஷ்ணன், காதல் தோல்வியால் கடும் மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அவர் கடலில் குதித்துத் தற்கொலை செய்யப்போவதாகக் கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக மீட்குமாறும் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்தார்.

பட்டினப்பாக்கம் கடற்கரை:

கேரள காவல் அதிகாரி உடனடியாக தனது மகன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தைச் சென்னை காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் புகைப்படத்தை உடனடியாக ஆய்வு செய்த சென்னை போலீசார், அது பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைப் பகுதி என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்தனர். இதையடுத்து, பட்டினப்பாக்கம் பகுதியில் இரவுக் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரோந்துப் படை போலீசாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை முடுக்கப்பட்டது.

3 மணி நேரத்தில் மீட்கப்பட்ட இளைஞர்:

கட்டுப்பாட்டு அறையின் தகவலின் பேரில் கடற்கரைப் பகுதியில் தீவிரமாகத் தேடிய ரோந்துப் படை போலீசார், அதிகாலை 3 மணியளவில் கடற்கரையில் தனியாக நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அவர் கேரள காவல் அதிகாரியின் மகன் அனந்த கிருஷ்ணன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட போலீசார், அவருக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், அனந்த கிருஷ்ணனை அவரது நண்பர் ஷாஜிமோலானாவிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். நள்ளிரவில் தகவல் கிடைத்த குறுகிய நேரத்திற்குள் சாதுர்யமாகச் செயல்பட்டு இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய சென்னை காவல்துறையின் அதிவிரைவு நடவடிக்கையைப் பொதுமக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Police Swiftly Rescue Kerala SIs Son Following Instagram Suicide Threat


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->