துணை வேந்தர் பதவிக்கு லஞ்சம் - முன்னாள் அமைச்சரின் வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு.!  - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றிய பாலகுருசாமி, பணி ஓய்வுக்கு பிறகு, வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், "உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் பணம் பெற்றுக்கொண்டு துணைவேந்தர் மற்றும் ஊழியர்களை நியமிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக அன்பழகன் கடந்த 2020-ம் ஆண்டு அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், "ஒரு அமைச்சராக பேராசிரியர்கள் நியமனத்தில் தனக்குப் பங்கு இல்லை என்பது தெரிந்தே, முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, தன்னைப் பற்றி அவதூறு கருத்து கூறியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும், அவர் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய பாலகுருசாமி மற்றும் தன் கருத்தை அறியாமல் செய்தி வெளியிட்ட வார இதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கையும் விடுத்திருந்தார்.

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த இரண்டு மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ”மனுதாரரின் பேட்டியைக் கருத்து சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. 

அந்த கருத்துக்கள் நியாயமான விமர்சனம் என்ற சாட்சியங்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் நீதிமன்றங்களில் நிரூபிக்க வேண்டும்” என்றார். அதன் பின்னர், அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court reject ex vc balagurusamy case against kp anbazhagan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->