அப்பளத்தை சாப்பிட்டால் கொரோனா போயிடும்.. அமைச்சருக்கு விபரீதம்..!! - Seithipunal
Seithipunal


கடும் பாதிப்பை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியானது பல நாடுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்த்து போராட ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பு சக்தியை தங்களது உடலில் அதிகரித்து கொள்வது அவசியம்.

கொரோனாவை தடுக்கும் என்று கூறி பலரும் விதவிதமான பொருட்களை விற்பனை செய்து கல்லாக்கட்டி வருகின்றனர். இதற்கிடையில் மத்திய நீர்வளம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சரான அர்ஜூன் ராம் மேக்வால் அப்பளம் ஒன்றிற்கு விளம்பரம் செய்யும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரித்து கொரோனா வைரஸ் விடாமல் விரட்டும் சக்தி இந்த அப்பளத்துக்கு இருப்பதாக தெரிவித்து இருப்பார். மேலும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலமாக அப்பள உற்பத்தியாளர்களில் ஒருவர் ' பாபிஜி ' என்ற இந்த சக்திவாய்ந்த அப்பளத்தை தயார் செய்து இருப்பதாக கூறியிருப்பார். 

இந்த நிலையில், அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். இதுகுறித்து அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில், " எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central minister affected by corona virus 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->