இளம்பெண் காரில் இழுத்துச் சென்று உயிரிழந்த விவகாரம் - மூத்த போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்க மத்திய அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இளம்பெண் ஒருவர் காருடன் சாலையில் இழுத்து செல்லப்பட்டு, உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் ஐந்து பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக, டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது, "கும்பலாக சேர்ந்து ஆண்கள் சிலர் தங்களது காரின் கீழ் இளம்பெண் ஒருவரை இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்தது ஒரு கொடூரமான சம்பவம் தான். குற்றவாளிகள் அனைவருக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் தூக்கில் போடப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் நான் கேட்டு கொண்டுள்ளேன். அவர்கள் அரசியல் தொடர்புள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்டக் கூடாது என்றுத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை மூத்த போலீஸ் அதிகாரி ஷாலினி சிங் என்பவரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதேபோன்று, டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் இந்த சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டதுடன், டெல்லி போலீசாருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt order to delhi young woman died case submit police officer


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->