தேசிய விண்வெளி தினம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!
central govt announce national space day august 23
தேசிய விண்வெளி தினம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!
உலக அளவில் முதல் முறையாக நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சாதனை படைத்தது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி அன்று நிகழ்ந்தது.
இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பெங்களூரு சென்ற போது, சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் படி மத்திய விண்வெளித்துறை நேற்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
'நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய வரலாற்று தருணத்தை நினைவுகூரும் வகையில் இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 23-ந் தேதியை 'தேசிய விண்வெளி தினமாக' அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், அதில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த முடிவு, வருகிற ஆண்டுகளில் மனித குலத்துக்குப் பயனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
central govt announce national space day august 23