இனி செல்போன் பயன்படுத்தத் தடை - பழனி கோவில் நிர்வாகம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


இனி செல்போன் பயன்படுத்தத் தடை - பழனி கோவில் நிர்வாகம் அதிரடி.!

தமிழ் கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். இந்தக் கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். 

வார விடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்கு காணப்படுவது வழக்கம். அப்படி வரும் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப்கார் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, "பழனி முருகன் கோவிலில் செல்போன் மற்றும் வீடியோ சாதனங்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, விஞ்ச் கார் மற்றும் ரோப் கார் பகுதிகளில் சென்போன்களை கைபேசி பாதுகாப்பு மையங்களில் ரூ.5 செலுத்தி வைத்துச்செல்லலாம். தரிசனத்திற்கு பிறகு கைபேசி மையங்களில் தங்களுடைய செல்போன்களை பெற்றுச்செல்லலாம்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cell phones banned in palani murugan temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->