உ.பி || மூன்று வாலிபர்களை புரட்டி எடுத்த கிராம மக்கள் - திருடர்களா? போலீசார் விசாரணை.!
case file on village peoples for attack three youths in uttar pradesh
உ.பி || மூன்று வாலிபர்களை புரட்டி எடுத்த கிராம மக்கள் - திருடர்களா? போலீசார் விசாரணை.!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சிதாபூர் மாவட்டத்தில் லௌகியா கிராம பஞ்சாயத்து தலைவர் அகிலேஷ் குமார் வீட்டில் மூன்று பேர் நுழைந்துள்ளனர். இது குறித்து மக்களுக்கு தகவல் தெரிய வந்த நிலையில் மூன்று நபர்களும் அருகில் இருந்த கருப்பு தோட்டம் வழியே தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளனர்.
அவர்களை மக்கள் விறகு கட்டையால் அடித்ததில் இருவர் படுகாயங்களுடன் தப்பித்துச் சென்ற நிலையில், ஒருவரை மட்டும் கிராமத்தினர் பிடித்து சராமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து தெரிந்து கொண்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட நபர்கள் மீதும், தாக்குதலில் ஈடுபட்ட கிராமத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் உ.பியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
case file on village peoples for attack three youths in uttar pradesh