2025-26 கல்வி ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு; விடுமுறை நாட்கள் இத்தனையா..? - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிந்து, கடந்த 02-ஆம் தேதி  2025 – 2026 கல்வியாண்டிற்கான பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது பள்ளிகள் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், 2025-26-ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது.

இதில், பள்ளியின் விடுமுறை மற்றும் தேர்வு காலங்கள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டின் மொத்த வேலை நாட்கள் 210 என்றும், அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, செப்டம்பர் 18 முதல் 26 வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும். செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 05-ஆம் தேதி வரை 09 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படவுள்ளது. காலாண்டு விடுமுறையிலேயே ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை வருகிறமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும். டிசம்பர் 24 முதல் ஜனவரி 04, 2026 வரை 12 நாட்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும்.

மேலும், ஜனவரி 14, 2026 முதல் ஜனவரி 18 வரை பொங்கல் விடுமுறை விடப்படும். பிப்ரவரி 01, 2026 தைப்பூச நாள் விடுமுறை அளிக்கப்படும். 10.04.2026 முழு ஆண்டுத் தேர்வு தொடக்கம். அடுத்து, 24.04.2026 கடைசி வேலை நாள். 25.04.2026 முதல் அடுத்த ஆண்டிற்கான கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Calendar release for the 2025 26 academic year


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->