மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையின் எதிரொலி: சத்தீஸ்கரில் 103 நக்சல்கள் சரண்..!
103 Naxals surrender in Chhattisgarh
எதிர்வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை நக்சல்கள் இல்லாத நாடக மாற்றுவோம் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதன்படி, நக்சல் அமைப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதுகாப்புப் படையினர் அதிரடி காரணமாக கடந்த சில நாட்களாக பல நக்சலைட்கள் உயிரிழந்து வருகின்றனர். இதில், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் அடங்குகின்றனர்.
இதனையடுத்து நக்சல்களின் ஆதிக்கம் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மட்டும் சுருங்கியுள்ளது. இதனால், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என நக்சல் அமைப்பினர், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால், அந்த கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாராகரித்துள்ளார்.
அத்துடன், 'அவர்கள் போலீசாரிடம் சரணடைய வேண்டும். ஆயுதங்களை கீழே போடுபவர்களை பாதுகாப்பு படையினர் எதுவும் செய்ய மாட்டார்கள், அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு' என உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் 103 நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். அத்துடன் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்காக தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இவ்வாறு சரணடைந்தவர்களின் வயது 18 முதல் 40 வயது வரை இருக்கும் எனவும், கூறப்படுகிறது. அவர்களில் 49 பேருக்கு 1.03 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது எனக்கூறியுள்ள அவர்கள், சரணடைந்தவர்களின் மறுவாழ்வுக்காக முதற்கட்டமாக அவர்களின் மறுவாழ்வுக்காக ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஆயுதங்களை விட்டு, மாநில அரசின் புதிய கொள்கைப்படி சரண் அடைபவர்களுக்கு வீடு, மருத்துவம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதுடன், அவர்கள் திறன் மேம்பாடு அல்லது சிறு தொழில் தொடங்க விரும்பினால் அதற்கு தேவையான உதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
103 Naxals surrender in Chhattisgarh