துர்கா சிலையை கரைக்க சென்ற இடத்தில் சோகம்: குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 11 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசத்தில், டிராக்டர் ஒன்று குளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சொத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் டிராக்டரில் துர்கா சிலையை ஏற்றிக்கொண்டு 20-க்கும் மேற்பட்டோர் சென்றுளனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், ஜேசிபி உதவியுடன் மீட்புப் பணிககளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தசரா பண்டிகை முடிந்து, துர்கா சிலையை குளத்தில் கரைப்பதற்காக டிராக்டரில் கொண்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிக பாரம் காரணமாக, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால்  டிராக்டர் குளத்தில் கவிழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேபோல், உஜ்ஜைன் மாவட்டத்தில் துர்கா சிலையை கரைப்பதற்காக பக்தர்கள் சென்ற டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து குறித்து மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இரங்கல் தெரிவித்து குறிப்பிட்டுள்ளதாவது:

'காண்ட்வாவின் ஜம்லி கிராமத்திலும், உஜ்ஜைன் பகுதியிலும், தசரா பண்டிகை முடிந்து துர்கா சிலையை கரைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்துகள் மிகவும் துயரமானவை. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 04 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய துர்கா தேவியை பிராத்திக்கிறேன்.' என்று மோகன் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11 killed as tractor falls into pond in Madhya Pradesh


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->