அதிமுகவில் இணைந்த 3வது பெண்! ஜெயலலிதாவுக்கே சீனியர்! அமைச்சராக வேண்டியவர்! யார் இந்த நடிகை லதா! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த பிரபல நடிகை லதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு முன்பே அதிமுகவில் உறுப்பினராக இருந்தவர் என்ற காரணத்தால் லதா மீண்டும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெறத் தொடங்கியுள்ளார். அவர் யார், அவரது அரசியல் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நடிகை லதா ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ராமநாதபுரம் ராஜா ராஜேந்திர சண்முக சேதுபதி. அவர் முன்னாள் முதலமைச்சர் ராஜாஜியின் அமைச்சரவையில் பொதுப் பணித்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

லதா சிறந்த நடனக் கலைஞராகவும் அறியப்பட்டார். ஒரு நிகழ்ச்சியில் அவர் ஆடிய நாட்டியத்தை பார்த்த நடிகர் ஆர்.எஸ். மனோகரன், அவரை எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் லதாவுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது, ஜெயலலிதாவுடன் நடித்த பல படங்களில் திமுக வளர்ச்சியை எடுத்துரைக்கும் வசனங்களும் பாடல்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் பின்னர் எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியை தொடங்கியபோது, அவரது படங்களில் அரசியல் கருத்துகள் மாறத் தொடங்கின.

அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த லதா, அவரது படங்களில் அதிமுகவின் கொள்கைகளை எடுத்துரைக்கும் வகையிலான வசனங்கள் மற்றும் பாடல்களில் நடித்தார். குறிப்பாக பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக முன்னேற்றத்தை வலியுறுத்தும் வசனங்கள் மூலம் பெண்கள் மத்தியில் அதிமுகக்கு ஆதரவு அதிகரிக்க உதவியதாக கூறப்படுகிறது.

அதிமுக தொடங்கியபோது கட்சியில் பெண்கள் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஜானகி அம்மாள் மற்றும் சத்தியவாணி ஆகியோருக்கு பிறகு மூன்றாவது பெண் உறுப்பினராக லதா இணைந்தார்.

எம்.ஜி.ஆர் அவரை நேரடியாக தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து அரசியலில் முக்கிய இடம் கொடுக்க விரும்பியதாக கூறப்படுகிறது. லதா சம்மதித்திருந்தால், அவர் அமைச்சரவை பதவியையும் பெற்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அப்போது பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அரசியலில் முழுமையாக ஈடுபட விரும்பவில்லை என்று அவர் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் அதிமுக வளர்ச்சிக்காக லதா பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்தினார். குறிப்பாக “சகுந்தலை” நாட்டிய நிகழ்ச்சி மூலம் சுமார் ₹35 லட்சம் நிதி திரட்டி கட்சிக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அதிமுக முக்கிய நிகழ்ச்சிகளில் லதாவின் நாட்டிய நிகழ்ச்சிகள் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது.

மேலும் வெளிநாட்டு பயணங்களில் எம்.ஜி.ஆர் தமிழில் பேசும் கட்சிக் கொள்கைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்குவது லதா தான் என்ற தகவலும் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் போது, ஜெயலலிதா சிலரை கட்சியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் திருநாவுக்கரசர் “எம்.ஜி.ஆர் அதிமுக” என்ற புதிய கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சியில் லதாவும் முக்கிய பொறுப்பில் இணைந்தார்.

பின்னர் திருநாவுக்கரசர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதன் பிறகு அவர் பாஜகவும் பின்னர் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்தார். ஆனால் லதா தொடர்ந்து தனியாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து வந்தார்.

தற்போது நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ள லதா, வரும் தேர்தல்களை முன்னிட்டு கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் அதிமுக அரசியலில் மீண்டும் லதாவின் பங்கு குறித்து கவனம் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The 3rd woman to join AIADMK Senior to Jayalalithaa She deserves to be a minister Who is this actress Latha


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->