'ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பியுள்ளார்கள்'; உதயநிதி விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


''இந்த ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.

ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதல்வரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா?'' என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக தயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? ஸ்லீப் மோடிலிருந்து (Sleep Mode)-வெளியே வருவாரா முதல்வர்? தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில், மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொடூர தாக்குதலில் அந்தப்பெண்ணின் கணவரும், மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களையும் அந்தக்கும்பல் கடத்தியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது.

மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.

ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதல்வரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா? ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் ரீல்ஸ் ஷூட் (Reels Shoot) செய்யும் டம்மி சிஎம், எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்?

இந்தக் குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' எனப் உதயநிதி பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi criticizes the ruling party stating that it is so full of sexual offenders that they could even start a dedicated sexual offenders wing


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->