தொடக்கப் பள்ளி மீதான தாக்குதலில் 168 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு, அமெரிக்க அரசு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை; ஈரான்..! - Seithipunal
Seithipunal


டெல்லியில், மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலத்தைக் குறிப்பிட்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில், ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனியின் பிரதிநிதி அப்துல் மஜித் ஹகீம் இலாஹி கலந்துகொண்டார்.

அப்போது ஈரானில், மினாப் பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதலில் 168 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு, அமெரிக்க அரசு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை என குறிப்பிட்டுள்ளதோடு, மோஜ்தபா கமேனி உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது; சில நாடுகள் உருவாக்கிய போர்களால் ஈரான் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கில் உள்ள ஏராளமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த பிப்.28 ஆம் தேதி மினாப் தொடக்கப் பள்ளியின் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி 168 அப்பாவி குழந்தைகளைக் கொலை செய்தனர்.

ஆனால், இன்றுவரை, கொல்லப்பட்ட சில குழந்தைகளின் உடல்கள் கிடைக்கவில்லை. அவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு கல்லறை கூட இல்லாததை நினைத்து அழுகின்றனர் என்று வேதனையை பகிர்ந்துள்ளார்.
 
மேலும், துரதிர்ஷ்டவசமாக, எங்களின் தொடக்கப் பள்ளியைத் தாக்கியதற்காக அமெரிக்க அரசு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை என்றும், இதுபோன்ற ஒரு பெரும் துயரம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நாடுகளும் இதுகுறித்து குரலெழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், கொல்லப்பட்ட முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் ஈரானிய மக்கள் நடத்திய போராட்டங்களில் மோஜ்தபா கமேனி பங்கேற்றதாக இலாஹி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran states that the US government has yet to apologize for the killing of 168 children in a missile attack


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->