சிங்கப்பூர் செல்லவிருந்த ஜெம் வீரமணியின் மகள் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்..!
Gem Veeramanis daughter stopped at Chennai airport
சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த 'ஜெம்' வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற முயன்ற போது கடைசி நேரத்தில் அர்ச்சனாவை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் வீரமணி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அர்ச்சனா ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனால் சிங்கப்பூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று 12 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சென்னை விமானநிலையத்தில் இருந்து அழைத்துச் சென்று அர்ச்சனாவிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 'ஜெம்' கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி, அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன், மேலாளர் சக்திவேல், காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு, ஆகியோா் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை செய்கின்றனா். ஏற்கெனவே அக். 15 முதல் 17 ஆம் தேதி வரையில் இரு நாள்கள் வீரமணியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மீண்டும் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகிய நால்வரையும் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு நேற்று மனு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Gem Veeramanis daughter stopped at Chennai airport