APG 2026; தங்கத்துடன் ஹாட்ரிக் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன்; 1.25 கோடி ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..! - Seithipunal
Seithipunal


ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், ராஜஸ்தான் வீராங்கனை மானஷி ஜி ஜோஷி இணைந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்கள்.

மகளிருக்கான இரட்டையர் எஸ் எல்3- எஸ்யு5 பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன் - மானஷி ஜி ஜோஷி சீனாவின் யங் க்கியூக்ஸிங் - ஸியோ ஜுஜியான் உடன் மோதினர்.

இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 21-16, 21-13 என்ற புள்ளிகளில் சீன வீராங்கனைகளை தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார்கள். இதன்மூலம் இந்தியாவுக்கு 28 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன. 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு இது இந்த எடிஷனில் மட்டுமே இது மூன்றாவது பதக்கமாகும். ஏற்கெனவே மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றுள்ளார்.

இந்தியா இதுவரை 28 தங்கத்துடன் மொத்தமாக 105 பதக்கங்களை வென்றுள்ளன. அத்துடன் பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்திலேயே நீடிக்கிறது.

தமிழக முதல்வர் விஜய், வீராங்கனை துளசிமதி முருகேசனின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில் கூறியுள்ளதாவது;

''ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய அணிகளுக்கும், அவ்வணிகளில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!

வீராங்கனை துளசிமதி முருகேசன் அவர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர், இதுவரை மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவரது தொடர் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்.'' என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay announces a cash incentive of One crore twenty five lakh for Thulasimathi Murugesan who secured a hattrick of medals including a gold


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->