ஆந்திராவை நோக்கி நகரும் 'அர்னாப்' புயல்; சென்னைக்கு பாதிப்பு இல்லை..? - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இதனால் இந்தப் புயல் சின்னம் நாளை (அக். 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் (அக். 25) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையவுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் அக். 26 ஆம் தேதி மேற்கு - மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலுக்கு 'அர்னாப்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த 'அர்னாப்' புயல் காரணமாக தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், ஆந்திரத்தை நோக்கி நகரும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில்,''அடுத்த 4-5 நாள்களில் உருவாகவுள்ள 'அர்னாப்' புயல், தமிழகத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், ஆந்திரத்துக்கு நகரும்.

இந்தப் புயல் சென்னைக்கு இல்லை, ஆந்திர மாநிலத்துக்கு நகருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyclone Arnab which is moving towards Andhra Pradesh will not affect Chennai


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->