விஜய்க்கு அரசியல் அழுத்தம் அதிகரிக்கிறதா? திமுக மேடைகளில் ‘பிக் பாஸ்’ ஜூலி! திமுகவின் பலே ப்ளான்! - Seithipunal
Seithipunal


2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக புதிய அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய் மீது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

சமீப காலமாக விஜய்க்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சங்கீதா விவாகரத்து விவகாரம் சமூக வலைதளங்களில் பேசப்படத் தொடங்கியதால், அவரைச் சுற்றிய அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளார். கடந்த சில நாட்களாக விஜயை விமர்சித்து அவர் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு வேலூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், தனது பேச்சில் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறியிருந்தார். ஒரு சிறுவன் காளைக்கு புல்லுக்கட்டு கொடுத்து அதை சமாதானப்படுத்தியதாக அவர் கூறிய அந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஜூலி விமர்சனம் செய்தார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், “இந்த பேச்சில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் காளை கதை சொல்லிவிட்டீர்கள். அதை கேட்டு இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் காளைக்கு அருகே சென்று புல்லுக்கட்டு கொடுக்க முயன்றால் விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழர்கள் நீண்ட போராட்டம் நடத்தி சாதித்ததை நினைவுபடுத்திய அவர், இத்தகைய கருத்துகள் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என்றும் கூறினார்.

இந்த வீடியோ வெளியாகியதும் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்வினை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிலர் தன்னை திட்டியும் மிரட்டியும் வருவதாக கூறி ஜூலி பின்னர் மற்றொரு வீடியோவும் வெளியிட்டார்.

அந்த வீடியோவில், “என்னை பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் நான் வீட்டிலோ அலுவலகத்திலோ இருப்பேன். நீங்கள் தான் பனையூரை விட்டு வெளியே வர மாட்டீர்களே; வேண்டுமானால் நான் வருகிறேன்” என்று சவால் விடுக்கும் வகையில் பேசினார்.

இதனால் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் மற்றும் ஜூலி இடையே வார்த்தைப் போராட்டம் மேலும் தீவிரமானது. இந்த விவகாரம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சமீப காலமாக ஜூலி திமுக தொடர்புடைய சில மேடைகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ளது. வருங்காலத்தில் திமுக சார்பில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் அவரை பங்கேற்கச் செய்யும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நடைபெற்ற “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற நிகழ்ச்சியிலும் ஜூலி கலந்து கொண்டு பேசினார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துக்கள் உருவாகியுள்ளன.

2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய கூட்டணிகள், விமர்சனங்கள் மற்றும் அரசியல் தந்திரங்கள் தொடர்ந்து வெளிப்படுவதால், வரும் மாதங்களில் அரசியல் சூழல் மேலும் சூடுபிடிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is political pressure increasing for Vijay Bigg Boss Julie on DMK stages DMK plan


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->