ஸ்மார்ட் போன் வாங்கினால் 2 டின் பீர் இலவசம்.. ஆஃபர் அறிவித்த உரிமையாளர் கைது.! - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட்போன் வாங்கினால் பீர் இலவசம் என அறிவித்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் புதிதாக தொடங்கும் தொழிலில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏதாவது வாங்கினால் கவர்ச்சியான அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர்.

இதில் சிலர் இலவச பொருட்களை வாங்குவதற்காகவே சிலர் உள்ளனர். அவர்களை கவரும் வகையில் உரிமையாளர்களும் பல்வேறு ஆஃபர்களை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஸ்மார்ட்போன் கடையை திறந்த உரிமையாளர் ஒருவர். அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளார். அதில் ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 டின் பீர் இலவசம் என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் இலவச பீர் வாங்குவதற்காக கடையில் குவிந்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தியவுடன் கடைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Buy smartphone 2 tin 2 beer free in uttarpradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->