அடடா.. சூப்பர் திட்டம்.. 99 ரூபாய்க்கு வருஷம் முழுதும் பேசலாம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாக செல்போன் பயன்பாட்டாளர்கள் அவதியுறும் விஷயம் தான் மாதா மாதம் சிம் கார்டின் வேலிடியை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது. அவ்வாறு மாதா மாதம் பணம் கட்டாதவர்களுக்கு வரும் இன்கமிங் சேவை கூட நிறுத்தப்படுவது வேதனையின் உச்சம்.

இது பற்றி பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட அதை சிம்கார்டு வழங்கும் பிரபல நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், இது போல இரண்டாவது சிம் கார்டாக தடை இன்றி செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் bsnl சிம் கார்ட் ஒரு பயனுள்ள திட்டத்தை வழங்குகிறது.

அதன்படி 99 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்தால் 375 நாட்களுக்கு இலவசமாக 300 அழைப்புகளை பெற முடியும். அத்துடன் இந்த திட்டத்தில் 30 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு 30 மெசேஜ்களை இலவசமாக இத்திட்டத்தின் மூலம் அனுப்பிக் கொள்ளலாம். 

இதன் மூலம் நமது சிம் கார்டு ஒரு வருடத்திற்கு ஆக்டிவாக இருக்கும். இன்கமிங் கால்களுக்கு மட்டும் இரண்டாவது சிம் பயனாளர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bsnl New Plan For 1 year Validity


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal