கல்யாண குஷியில் மணப்பெண்...! நடனமாடிய போது நேர்ந்த விபரீதம்...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் படாவூன் மாவட்டம் நூர்பூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இந்தப் பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், நேற்று திருமணம் நடப்பதாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு மணப்பெண்ணிற்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மணப்பெண் மகிழ்ச்சியாக அனைவர்முன்பும் நடனம் ஆடினார்.அவருடன் மற்ற சொந்தங்களும் சேர்ந்து நடனம் ஆடினர்.

ஆட்டம் பாட்டம் என அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.அப்போது துர்சம்பவமாக மணப்பெண் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

உடனடியாக, அங்கிருந்தவர்கள் மணப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.அங்கு மணப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

துக்கச்சம்பவமாக மணப்பெண் இறந்ததால் மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும், 'தங்களது மகளுக்கு எந்தவிதமான நோய்களும் இல்லை.

ஆனால் ஏன் மயங்கி விழுந்து இறந்தார் என தெரியவில்லை' என்றும் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bride was state of bliss tragedy happened while she was dancing


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->