பயங்கரவாதிகளுக்கு மதம் இல்லை என்றதற்காக காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய சூழலில், சம்பவம் நடந்த மறுநாள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோபந்த் காவல் நிலைய ஆய்வாளர் நரேந்திர குமார் சர்மா, செவ்வாய்க்கிழமை அன்று காவல் நிலையத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.

அக்கூட்டத்தில் பேசிய காவல் ஆய்வாளர் நரேந்திர குமார், மக்கள் சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

அவர் மேலும் பேசுகையில், "பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் மதம் இல்லை. முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று நினைப்பது முற்றிலும் தவறு. அனைத்து மதங்களிலும் இத்தகையவர்கள் உள்ளனர். இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள்கூட நக்சல்களாக உள்ளனர். கடற்படை, ராணுவம் மற்றும் பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த மதமும் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தூண்டுவதில்லை." என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தாம் 34 ஆண்டுகளாகப் பாகுபாடின்றிப் பணியாற்றி வருவதாகவும், தான் வியந்து பார்த்த காவல் அமைப்பை மேம்படுத்தவே இத்துறையில் இணைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், காவல் நிலையத்திற்குள் ஏழைகள் சுரண்டப்படும் போக்கு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நரேந்திர குமார் இவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bomb blast Terrorist Uttar Pradesh inspector


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->