சிராஜிக்கு ராக்கி கட்டிய பாலிவூட் பிரபலம்: என்ன இது..? காதலினு சொன்னாங்க.. இப்படி சகோதரி ஆகிட்டாங்களே..?
Bollywood celebrity tied a rakhi to Siraji
ரக்ஷா பந்தன் நாடு முழுவது கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்து கொண்டாடினர்.
பல்வேறு பிரபலங்களுக்கு தங்களின் சகோதர்களுக்கு ராக்கி கட்டி கொண்டாடினர். இந்நிலையில் பிரபல இந்திய கிரிகெட் வீரர் முகமது சிராஜுக்கு பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே ராக்கி கயிறு கட்டி விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி ஜனாய் போஸ்லே தனது 23-வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்துகொண்டது இணையத்தில் பேசுபொருளானது. அதாவது அவரும் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கள் பரவியது. இந்நிலையில் இன்று சிராஜுக்கு ராக்கி கட்டி அந்த வதந்திகளுக்கு ஜனாய் போஸ்லே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
English Summary
Bollywood celebrity tied a rakhi to Siraji