பல்லடத்தில் பரபரப்பு - மது அருந்தியதை தட்டிக்கேட்டதற்காக பாஜக நிர்வாகி குடும்பத்துடன் வெட்டிக் கொலை.!
bjp excuetive kill with family in tirupur palladam
பல்லடத்தில் பரபரப்பு - மது அருந்தியதை தட்டிக்கேட்டதற்காக பாஜக நிர்வாகி குடும்பத்துடன் வெட்டிக் கொலை.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராம பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய வீட்டின் அருகே ஒருவர் அருந்தியதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 4 போரையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில், அவர்கள் நான்கு பெரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செந்தில்குமார் உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, மற்ற மூவரின் உடல்களை எடுக்க விடாமல் ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போதை ஆசாமியால் படுகொலை செய்யப்பட்ட மோகன்ராஜ், பாஜக மாதப்பூர் ஊராட்சி கிளையின் தலைவராக உள்ளதால், இந்த படுகொலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
‘‘குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை பாஜக தலைவர் சகோதரர் திரு.மோகன்ராஜ் அவர்கள் சமூகவிரோதிகளால் குடும்பத்துடன் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
திரு. மோகன் ராஜ் அவரது தம்பி, அம்மா, சித்தி என நான்கு பேரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். சகோதரர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்?
தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே’’ என்று, பதிவிட்டுள்ளார்.
வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்டதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
bjp excuetive kill with family in tirupur palladam