அடித்து ஆடும் பாஜக! வெளியான வேட்பாளர் பட்டியல் !
BJP Candidate list Madhya Pradesh
பரபரப்பான சூழ்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு போட்டியிடும் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவை முன்பு வரும் இந்த 5 மாநில தேர்தல் வெற்றி நாடு முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், காங்கிரசை முந்திக்கொண்டு பாஜக தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

அண்மையில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச மாநிலங்களின் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்ட நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு இன்று மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
தற்போதைய சிட்டிங் அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரஹலாத் சிங் படேல் ஆகியோர் திமானி மற்றும் நரசிங்பூர் தொகுதிகளில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் பாஜக எம்பி ராகேஷ் சிங் ஆகியோர் இந்தூர்-1 மற்றும் ஜபல்பூர் பாஸ்சிம் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
English Summary
BJP Candidate list Madhya Pradesh