வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.பி.க்கள் 10 பேர் திடீர் ராஜிநாமா!
BJP 10 MPs suddenly resigned
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற பா.ஜ.கவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 9 பேரின் ராஜினாமா கடிதத்தை இன்று மக்களவை சபாநாயகர் ஏற்றிக்கொண்டார்.
மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் படேல் உள்பட பா.ஜ.கவை சேர்ந்த 9 மக்களவை உறுப்பினர்கள் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போட்டி வெற்றி பெற்றதை தொடர்ந்து நேற்று மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இவர்களுடன் சேர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர்கள் அனைவரும் தங்கள் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களில் எம்.எல்.ஏக்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த எம்.பிகள் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர், மத்திய நிர்வாக துறை இணைய அமைச்சர், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் உள்ளிட்ட பலர் ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் சிங் படேல் இருவரும் மத்திய பிரதேச எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP 10 MPs suddenly resigned