பிரியாணியில் 20 தூக்க மாத்திரை; தலையணையால் அழுத்தி கொலை: ஆந்திராவில் மனைவி - கள்ள காதலன் கைவரிசை!
Biryani Murder Mystery Wife and Lover Arrested for Suffocating Husband in Guntur
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவுரு கிராமத்தில், கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
திட்டமிட்ட சதி: லோகம் சிவநாகராஜுவின் மனைவி லட்சுமி மாதுரி, தனது காதலன் கோபியுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
விஷம் கலந்த உணவு: கடந்த ஜனவரி 18 அன்று, இரவு உணவாகப் பிரியாணி தயாரித்த மாதுரி, அதில் 20 தூக்க மாத்திரைகளைப் பொடித்துக் கலந்து சிவநாகராஜுவுக்குக் கொடுத்துள்ளார்.
கொடூரக் கொலை: பிரியாணி சாப்பிட்டு அவர் மயக்கமடைந்தவுடன், காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்த மாதுரி, இருவரும் சேர்ந்து தலையணையால் முகத்தை அழுத்தி சிவநாகராஜுவை மூச்சுத்திணறச் செய்து கொன்றனர்.
நாடகம் அம்பலம்:
கொலைக்குப்பிறகு, தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மாதுரி உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார். இருப்பினும், உடலில் இருந்த காயங்கள் மற்றும் இரத்தக் கறைகளைக் கண்டு சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
உண்மை கண்டறியப்பட்டது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் மூச்சுத்திணறச் செய்து கொல்லப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, போலீசார் மாதுரி மற்றும் கோபியை அதிரடியாகக் கைது செய்தனர்.
கொலைக்குப்பிறகு மாதுரி சடலத்தின் அருகே அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்ததாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை மாவட்ட எஸ்.பி (SP) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
English Summary
Biryani Murder Mystery Wife and Lover Arrested for Suffocating Husband in Guntur