பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து காரணம் என்ன? வெளியான விசாரணை அறிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத் அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த முப்படை விசாரணைக் குழு சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டது. மேலும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மற்றும் களத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணை அறிக்கையும் தயார் செய்து, அதனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்துள்ளது.

அந்த விசாரணை அறிக்கையில், விபத்துக்கான காரணம்,  எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த விபத்துக்கான கரணம் குறித்து தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, " இந்த விபத்துக்கு இயந்திரக் கோளாறோ அல்லது சதி வேலையோ, விமானியின் கவனக்குறைவோ இல்லை. 

திடீரன்று வானிலை மோசமடைந்தபோது ஹெலிகாப்டர் அந்த மேகமூட்டத்துக்குள் சிக்கி உள்ளது. இதன் காரணமாகவே, திசைமாறி சென்று எதிர்பாராமல் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BIPIN RAWAT ACCIDENT ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->