கோடீஸ்வரர்கள் உயர நாட்டின் வளங்கள் சூறையாடல்!...மோடி மீது செல்வப்பெருந்தகை பகிரங்க குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பரப்புரையில்  மோடி நிறைய வாக்குறுதிகளை கொடுத்து 2019 வரை அதை நிறைவேற்றாமல், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி 2024 மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையில்லாத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மை, பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சின் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு எதிராக அடக்குமுறை ஏவிவிடப்பட்ட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க 2021-ல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது, சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டுமென்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.

அதை நிறைவேற்றி பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கி, சமூகநீதி பெறுகிற வாய்ப்பை அளிக்க பிரதமர் மோடி தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.  உலக பசி குறியீட்டில் இந்தியா 125 நாடுகளில் 111-வது இடத்தில் இருக்கிறது. 20 கோடி மக்களை வறுமையிலிருந்து விரட்டியதாக கூறிய மோடி ஆட்சியில் வறுமை ஒழிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

பிரதமர் மோடி ஆட்சியில் தொடர்ந்து கோடீஸ்வரர்கள் மேலும் கோடீஸ்வரர்களாக ஆவதற்கு நாட்டின் வளங்களை சூறையாடி சொத்துகளை குவித்து வருகிறார்கள்.  2023-ல் 259 கோடீஸ்வரர்கள் இருந்த நிலையில்,  அது நடப்பாண்டில் 334 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 159 லட்சம் கோடியாக உயர்ந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 50 சதவிகிதமாக உயர்ந்திருப்பதன் மூலம் மோடி ஆட்சி யாருக்காக நடக்கிறது? 

மோடி ஆட்சி என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத ஆட்சி என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டு உரிய பாடத்தை உரிய நேரத்தில் நிச்சயம் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Billionaires are looting the countrys resources Modi is publicly accused of being wealthy


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->