பிகாரில் சோகம்: முதல்வரின் பிடிவாதத்தால் மேலும் 2 உயிர் பலி! - Seithipunal
Seithipunal


பீகார், தார்பங்கா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 2 கிராமவாசிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பிகாரில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளதால் இது போன்ற கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்கதையாக உள்ளது. கடந்த மாதம் கள்ளச்சாராயத்தால் 2 பேர் உயிரிழந்தனர். 

மேலும் பலரது பார்வை பறிபோனது. தார்பங்கா மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெருவித்திருப்பதாவது, 'ருஷ்தாம்பூா் கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் நேற்று முன்தினம் மர்ம முறையில் உயிரிழந்தனர். 

மேலும் சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினர் உடனடியாக தகனம் செய்து விட்டதால் இறப்புக்கான காரணம் கண்டறிய முடியவில்லை. 

இருப்பினும் அந்த கிராமத்தில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்ததாக தெரியவந்தது. 

இதன் காரணமாகவே 2 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது' என்றார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அரசு முழு மதுவிலக்கு அமல்படுத்தியது. சட்டத்துக்கு புறம்பாக கலாச்சாராயம் உள்ளிட்ட மது விற்பனை நடைபெற்று வருவதால் பல்வேறு ரசாயன பொருட்கள் கலந்து விஷமாக மாறி உயிரை பறிக்கிறது. 

இதனை அடுத்து பல்வேறு தரப்பிலும் மதுவிலக்கை தளர்த்த வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் முதல்வர் நிதிஷ்குமார் முழு மதுவிலக்கு முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar counterfeit liquor Two killed 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->