நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: ஆதரவாளர்கள் அடம்! - Seithipunal
Seithipunal


மத்தில் ஆளும் பாஜக கூட்டணியின் அங்கமாக உள்ள ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமாராக உள்ளார். இந்நிலையில், இன்று நடைபெறும் ஜனதா தள கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு முன்னதாக, முக்கிய தலைவர் சோட்டு சிங்என்பவர், நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை சுட்டிக்காட்டும் போஸ்டர்கள் மற்றும் கட் அவுட்கள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்த போஸ்டர்கள் கட்சி அலுவலகம் உள்ளிட்ட வழிநெடுகவிடப்பட்டுள்ளன, இதில் நிதிஷ் குமாருடன் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் படங்கள் உள்ளன. அதோடு, புகழ் பெற்ற சோசியலிசவாதியான நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. 

மேலும், அவர் மாநிலத்துக்கு செய்த முக்கிய முயற்சிகள் மற்றும் சாதனைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதனால் இந்த விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bharat Ratna should be given to Nitish Kumar Supporters


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->