அயோத்தி சிலை பிரதிஷ்டை: 7000 விஐபிகளுக்கு அழைப்பு!
Ayodhi Idol Consecration Invitation to 7000 VIPs
அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்க 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு ராம ஜென்ம பூமி வழக்கில் அளித்த தீர்ப்பை அடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
சுமார் 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் இந்த ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவிலின் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த சிலை 8 அடி உயரம், 3 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் பிரதேசத்தை செய்யப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்திர பிரதேச முதல்வர் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட 3000 முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழக்கப்பட்டுள்ளது.
English Summary
Ayodhi Idol Consecration Invitation to 7000 VIPs