சிறுவனுக்கு பாலியல் தொல்லை - கையும் களவுமாக பிடிபட்ட ஆட்டோ ஓட்டுநர்.!!
auto driver arrested for harassment to boy in navi mumbai
சிறுவனுக்கு பாலியல் தொல்லை - கையும் களவுமாக பிடிபட்ட ஆட்டோ ஓட்டுநர்.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையில் வாஷி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுவன் ஒருவன், தன் நண்பர்களுடன் வணிக வளாகத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் தரைத் தளத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றிருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஆட்டோ ஓட்டுநர், சிறுவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை விரும்பாத அந்தச் சிறுவன் ஒருவழியாக ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து தப்பித்து தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் படி போலீசார் சம்பவம் தொடர்பாக போக்சோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
auto driver arrested for harassment to boy in navi mumbai