சுதந்திர இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


அடல் பிஹாரி வாஜ்பாய் :

சுதந்திர இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி, அடல் பிஹாரி வாஜ்பாய் 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரில் பிறந்தார். 

இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 3 முறை பிரதம மந்திரியாகவும் இருந்தார். மேலும் இவர் மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவியவர் இவரே.

இவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, லோகமான்ய திலகர் விருது, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது, பாரத ரத்னா விருது எனப் பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி மறைந்தார்.


கியானி ஜெயில் சிங் :

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் அவர்கள் 1916ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார். 

இவர் தனது 16வது வயதில் பகத் சிங்கின் தியாகச் செயலால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்துக் கொண்டார்.

1962ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சிறிது காலம் பிரதாப் சிங் கைரோன் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றினார். பின்னர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பணியாற்றிய இவர் 1972ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.

1980ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் திருமதி.இந்திரா காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.

1982ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி ஜெயில் சிங் நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றார். 1987ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்த இவர் 1994ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atal bihari vajpayee birthday 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->