மக்களே உஷார்.. தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. மாநில அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். 

இதனிடையே, அசாம் மாநிலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 902 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் முழுமையான தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி போடாத ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் விடுப்பு அல்லது அசாதாரண விடுப்பு எடுத்து கொண்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அசாம் அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், தடுப்பூசி போடாத பொதுமக்கள் மருத்துவமனைகளை தவிர பொது இடங்களுக்கு நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். பொது இடங்களுக்கு செல்லும் அனைத்து மக்களும் முழுமையான தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை எடுத்து செல்ல வேண்டும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assam govt announced vaccinated


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->