எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடு! மீட்பு பணியில் இந்திய இராணுவம்!
Asam flood
நாட்டின் ஒரு பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில். கேரளா. அசாம், மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் தேதி வட இந்திய பெருங்கடலில் உருவான ரீமால் புயல் மேற்கு வங்க மாநிலம் மற்றும் வங்கதேச நாட்டுக்கு இடையே கரையை கடந்த நிலையில், இந்த புயல் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் கனமழை பெய்து, சாலைகள் பலவும் அடித்து செல்லப்பட்டன.
மேலும், விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன. பாலங்கள் உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது போர்க்கால அடிப்படையில் இந்திய ராணுவம் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை கொண்டு செல்வதற்காக தற்காலிக சாலைகள், பலன்களை இந்திய ராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி அசாம் மாநில அரசு இந்திய ராணுவத்தை ராணுவத்தின் உதவியை நாடியது. அதன் அடிப்படையில் அசாம் ரைபிள் படை வீரர்கள் மீட்பு பணியில் களமிறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கினர்.
இதேபோல் மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலத்திலும் மீட்பு பணிகளை இந்திய ராணுவத்தினர் துரிதமாக செய்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 1500 பெண்கள், 800 குளந்தைகள் உட்பட 4000 பேரை இந்திய ராணுவத்தினர் மீட்டு உள்ளனர்.