பேய விட கொடூரமான பாவியா இருக்கானுங்க போல...! சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளைத் திருடி விற்ற அதிர்ச்சி சம்பவம்...! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் சட்டவிரோத ஆடை வியாபாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுடுகாட்டில் பணியாற்றும் சில ஊழியர்கள், இறந்தவர்களின் உடலிலிருந்தே ஆடைகளை அகற்றி ரகசிய கும்பல்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆடைகளை கைப்பற்றும் கும்பல், அவற்றை நன்றாக துவைத்து, இஸ்திரி செய்து, புதிதாக இருப்பது போல பொதிகளில் அடைத்து சந்தைகளில் மலிவு விலையில் விற்பனை செய்து வந்துள்ளது. இந்த மோசடி இந்தூரிலிருந்து அகமதாபாத் வரை பரவி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுடுகாட்டிற்கு உடல்கள் கொண்டு வரப்படும் நேரங்களில், இறுதிச்சடங்கு நடைபெறுவதற்கு முன்பே உடலில் இருந்த ஆடைகள் அகற்றப்பட்டு இடைத்தரகர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அந்த ஆடைகள் சுத்தம் செய்யப்பட்டு ஏழை மக்களை குறிவைத்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சுடுகாட்டை சுற்றிய பகுதிகளில் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் தனியே செயல்பட்டு வந்துள்ளனர். ஆடைகள் கிடைத்தவுடன் அவற்றை சந்தைகளில் பரப்பி விற்று லாபம் ஈட்டி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டவிரோத விற்பனையில் சால்வைகள் ரூ.20 முதல் ரூ.40 வரை, குர்தா-பைஜாமா ரூ.45, சட்டை மற்றும் கால்சட்டை ரூ.50, புடவைகள் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சுடுகாட்டு ஊழியர்களிடமிருந்து இந்த ஆடைகள் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டன என்பது இதுவரை தெரியாமல் உள்ளது.மனித உணர்வுகளை உலுக்கும் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து உள்ளூர் மக்களிடையே கடும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்ற இந்த மோசடி அதிகாரிகளின் கண்காணிப்பில் சிக்காமல் போனது எப்படி என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பி வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

As if there more cruel sinner than ghost Shocking incident stealing and selling clothes from corpses crematorium


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->