நான் தவறு செய்வது கோலிக்கு தெரியும், கண்டுக்க மாட்டார்- அனுஸ்கா ஓபன் டாக்.!  - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். அனுஷ்கா சர்மா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தன்னுடைய கணவரின் உடைகளை திருடி அணிவதாக குறிப்பிட்டுள்ளார்.

இப்படி அவர் செய்வதை கோலியும் விரும்புவதாக அவர் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில், கோலியின் அலமாரியில் இருந்து நான் பலவற்றை பயன்படுத்துவேன். பெரும்பாலும் டீசர்ட் போன்ற துணிவகைகளை திருடி விடுவேன். சில நேரங்களில் அவருடைய ஜாக்கெட்டுகளை எடுத்துக்கொள்கிறேன்.

நான் இவ்வாறு செய்யும் பொழுது விராட்டும் அதனை வரவேற்கின்றார். மேலும் திருமண நாளில் பிங்க் நிற உடையை அணிய கூடாது என்பதை நான் நம்பவில்லை. எனக்கு அதுபோன்ற விஷயங்களில் எப்பொழுதும் நம்பிக்கை இருப்பதில்லை என கூறியுள்ளார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட இருவரின் புகைப்படங்களும் சில மணிநேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியதே குறிப்பிடத்தக்கது. அதில் பிங்க் கலர் உடை அணிந்த அனுஷ்கா மிகவும் அழகாக இருந்தார்.

தற்பொழுது விராட்டும், அனுஷ்காவும் பூட்டானில் தங்களுடைய விடுமுறையை கழிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அந்த புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவேற்றி கொண்டாடி வரும் நிலையில், கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் விடுமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

anushka sharma wears kohli clothes


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->