விழுப்புரம் || சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை.! லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.!
anti corruption police ride in mailam registrars office
மயிலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இரவு நேரத்தில் சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர். அதாவது, துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தனர்.
பின்னர், அவர்கள் அலுவலகத்தின் ஜன்னல், கதவுகளை உள்புறமாக பூட்டிக்கொண்டு தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இதுவரைக்கும் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் சிக்கியது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலுவலக நேரம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
anti corruption police ride in mailam registrars office