ஆந்திர முதல்வர் டெல்லி சென்ற விமானம்.! அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கு காரணம் என்ன?.  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் நேற்று மாலை உலக முதலீட்டாளர் மாநாட்டிற்காக டெல்லியில் நடக்கும் ஆயத்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு சென்றார். 

அதற்காக, அவர் விஜயவாடா கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து அரசு விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தார். இதையடுத்து அந்த விமானம் பறக்கத் தொடங்கிய அடுத்த ஒரு சில நிமிடங்களில் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. 

இதையறிந்த விமானி, உடனே விமானத்தை மீண்டும் விஜயவாடா விமான நிலையத்திற்கு திருப்பி வந்து தரையிறக்கினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தனது வீட்டுக்கு திரும்பிவிட்டார். மேலும், முதலமைச்சர் டெல்லி செல்வதற்கான மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோன்று, மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் ஜல்கான் மாவட்டத்தில் நடக்கும் 'பஞ்சாரா கும்ப்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்த மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் திட்டமிட்டு இருந்தனர். 

அதற்காக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும் மும்பையில் இருந்து விமானத்தில் புறப்பட்டனர். ஆனால்,  விமானம் நடுவானில் மோசமான வானிலையில் சிக்கியது. 

இதனால் விமானத்தை மேற்கொண்டு இயக்க முடியாமல், விமானம் மீண்டும் மும்பைக்கு திருப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும் காணொலி காட்சி மூலமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andira cm jeganmohan reddy retun vijayavada airport for flight engine problam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->