ஆந்திரா | வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து - தீவிர விசாரணையில் போலீசார்!
Andhra mall fire accident
ஆந்திரா-ஒரிசா எல்லை பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வணிக வளாகத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
அதே சமயத்தில் காற்று வேகமாக வீசியதால் கட்டிடம் முழுவதும் தீ வேகமாக பற்றி எரிந்தது. இதனை பார்த்த மக்கள் இது தொடர்பாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் வணிக வளாகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
தீயில் எரிந்து சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் என கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது யாராவது தீ வைத்து எரித்தார்களா என போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Andhra mall fire accident