அம்பானி இல்ல திருமண விழா... திடீரென குவிந்த ஏராளமான போலீசார்! பின்னணியில் பரபரப்பு.!
Ambani wedding ceremony bomb threat person arrested
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்குமான திருமணம் கடந்த 12ஆம் தேதி மும்பையில் கோலகாலமாக நடைபெற்றது. திருமண நிகழ்ச்சி 3 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டதில் இரண்டாவது நாள் சுப ஆசீர்வாத் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாவது நாள் மங்கள உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழில் அதிபர்கள், சர்வதேச அளவிலான முக்கிய பிரபல பிரமுகர்கள் என உள்ளூர் திரை பிரபலங்கள் முதல் உலகப் பிரபலங்கள் வரை பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் ,கௌரி கான், சல்மான்கான், ஆலியா பட், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல பங்கேற்றனர்.
அமிதாபச்சன் மற்றும் நடிகர் ரஜினி காந்த் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கிரிக்கெட் பிரபலம் டோனி, மல்யுத வீரர் ஜான் சீனா ஆகியோரின் நடனமும் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியின் போது வெடிகுண்டு வெடிக்கும் என சமூக வலைதள மூலம் நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மும்பை போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் குஜராத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்த வைரல் ஷா என்பவர் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை வைரல் ஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமண நிகழ்ச்சியில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Ambani wedding ceremony bomb threat person arrested