ஆம்புலன்ஸில் நினைவிழந்து இருந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்: பீகாரில் ஊர்க்காவல் படைத் தேர்வின் போது நடந்த கொடுமை..!
Alleged gang rape of unconscious woman in ambulance in Bihar
கடந்த ஜூலை 24-ஆம் தேதி பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள ராணுவ மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்தேர்வு நடைபெற்றது. குறித்த தேர்வுக்கு வந்த 26 வயது பெண் ஒருவர் உடல் தேர்வின் போது மயங்கி விழுந்துள்ளார்.
அப்போது ,மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அந்த பெண்ணை ஆம்புலன்ஸில் வைத்து நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலையில் நினைவு இழந்து இருந்த போது பல்வேறு ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். குறித்த புகாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மட்டும் தொழில்நுட்ப நிபுணர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அங்கு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், பீகாரில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டதாக லோக் ஜனசக்தி கட்சி எம்.பி. சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கடும் கன்னடம் தெரிவித்துள்ளனர்.
English Summary
Alleged gang rape of unconscious woman in ambulance in Bihar