ஆலப்புழா ரயில் எரிப்பு வழக்கு.. என்.ஐ.ஏ விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை..!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மாதம் ஆழப்புழா கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் கோழிக்கோடு மாவட்டம் ஏலாத்தூர் அருகே சென்று கொண்டிருந்த பொழுது ரயில் பயணிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சக பயணிகள் மீது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்தார். இந்த சம்பவத்தில் ரயிலில் பயணித்த ஒரு பெண், ஒரு குழந்தை, ஒரு ஆண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

படுகாயம் அடைந்த மற்ற பயணிகள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையிலும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த என்ஐஏ போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். 

ரயில் பெட்டிக்கு தீ வைப்பு சம்பவத்தில் தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் தேசிய அளவில் புலன் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஷாருக் செய்பின் என்ற நபரை கைது செய்தனர். மேலும் இவருடன் தொடர்புடைய நபர்களையும் விசாரணைக்கு ஆஜராக மாறு என்.ஐ.ஏ அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்

டெல்லியை சேர்ந்த முகமது ஷாபி என்ற நபரையும் அவருடைய மகனையும் ஷாருக் உடன் தொடர்பில் இருந்ததால் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தனர். இதனால் இருவரும் கொச்சியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். 

கடந்த வியாழக்கிழமை இருவரும் விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என என்ஐஏ அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை முகமது ஷாபி அவர் தங்கி இருந்த விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கொச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் முகமது ஷாபியின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ஐஏ விசாரணைக்கு வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alappuzha train burning case prisoner commits suicide by hanging


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->